கிராமங்களில் விழிப்புணர்வுக்காக ரத்ததான முகாம்: ஆர்வம் காட்டிய வெள்ளானூர் மக்கள்

ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ஆவடி அருகே கிராமப்புற ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடி அருகே கிராமப்புற ரத்ததான முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

சென்னை: இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்கள கூட்டமைப்பு சார்பாக ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்கள் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராமத்தில் சனிக்கிழமை அன்று ரத்ததான முகாமை நடத்தியது.

கிராம மக்களிடம் விபத்துக் காலங்களில் உயிர்காக்கும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் 150-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

இதுகுறித்து அமைப்பின் தலைவரும் ரத்ததான முகாமின் ஒருங்கிணைப்பாளருமான மகாலிங்கம் கூறுகையில், ”கிராம அளவில் ரத்த தானம் குறித்த உயர் மட்ட விழிப்புணர்வை இந்த முகாம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in