

சட்டப்பேரவைத் தேர்தலில் ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம், தமிழகம் சாதிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.
பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் ரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு அவர் பேசியது: தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்நிலை தொடர மீண்டும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தயவுசெய்து ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம். தமிழகம் சாதிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக பல தீய செயல்களில் ஈடுபடுகிறார். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிறார். தனது சத்தியத்தை மீறி, அரசியலில் மகனை முன்னிறுத்தும் ராமதாஸின் பேச்சை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.