

அதிமுக கூட்டணியில் தொகுதி கிடைக்கும் என்று நம்பியிருந்த பல கட்சிகளை கூட்டணியில் சேர் க்காததற்கு காரணம் குறித்து அமைச்சர் பி.தங்கமணி பேசியுள் ளார்.
திருச்சியில் 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, அதிமுக கூட்டணியில் குறிப்பிட்ட சில கட்சிகளை சேர்க்காததற்கான காரணத்தை விளக்கினார். அவர் பேசியதாவது:
இதுவரை நடந்த தேர்தல்களில் அம்மா அறிவித்துவிட்டார் என்பதற்காக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைத்துவந்தோம். ஆனால் வெற்றி பெற்ற பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணிக் கட்சிகள் வெளியேறும்போது, அவருக்காக உழைத்த அதிமுக நிர்வாகி வெளியே நிற்க வேண்டியுள்ளது.
ஆனால், வெற்றி பெற்ற அந்த கூட்டணிக் கட்சி நிர்வாகி உள்ளே இருப்பார். இந்த நிலையை உணர்ந்துதான், இனி மேல் கூட்டணியே கிடையாது என்று அம்மா முடிவு செய்துவிட்டார்.
அம்மா மீது எப்போதும் விசுவாசமாக இருக்கும் அந்த 7 பேர் மட்டும் போதும் என்று கருதி அவர்களுக்கு மட்டும் தொகுதி ஒதுக்கியுள்ளார். எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.