

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘திமுக தலைவர் கருணாநிதியை விமர் சித்து பேசியதாக வைகோ மீது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரி விக்கப்பட்டிருந்தது. இதற்கு வைகோவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வைகோ, தான் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கோரிவிட்டார். கூட்டணி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தோம்.
இந்நிலையில் தொடர்ந்து திமுகவினர் வைகோவின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் வைகோவுக்கு அளித்த நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழ கத்தின் நலனுக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அதை ஏற்காது. மக்களோடு சேர்ந்து போராடும்” என்றார்.