Published : 25 Apr 2016 07:21 PM
Last Updated : 25 Apr 2016 07:21 PM

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி

முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் தனக்கு ரூ. 117 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 637 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 11 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது.

5 ஆண்டுகளில் இரட்டிப்பான சொத்து மதிப்பு

கடந்த 2011 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு ரூ. 51 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ. 67 கோடி அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் விவரம்

வங்கிகளில் வைப்புத் தொகை, நிறுவனங்களில் முதலீடுகள், 9 வாகனங்கள், தங்க, வெள்ளி நகைகள் என மொத்தம் ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் போயஸ் தோட்ட இல்லம் உட்பட ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வங்கிகளில் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 கடன் உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x