தமிழகத்தில் மே 6, 8-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரம்

தமிழகத்தில் மே 6, 8-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரம்
Updated on
1 min read

பாஜக வேட்பாளர்களை ஆத ரித்து வரும் மே 6 மற்றும் 8-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார்.

பல கட்சிகளுடன் கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, தேவ நாதன் யாதவின் இந்திய மக் கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஜி.கே.நாகராஜின் கொங்கு ஜனநாயக கட்சி ஆகிய கட்சி களுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தியாகராய நகரில் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவை தெற்கு தொகுதியில் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர்களை ஆத ரித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 6-ம் தேதி ஓசூர், சென்னை, 8-ம் தேதி வேதாரண்யம், கன்னியாகுமரி யில் பிரச்சாரம் செய்ய இருப்ப தாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். சென்னை உட்பட 4 இடங்க ளில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான இடம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக குறிவைக்கும் தொகுதிகள்

நாகை மாவட்டம் வேதாரண் யம் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.கே.வேதரத்தினம் போட்டி யிடுகிறார். இவர், திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2011-ல் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப் பட்டது. இதனால் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டி யிட்டு 42 ஆயிரத்து 871 வாக்குகளை பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் பாஜக 19 ஆயிரத்து 217 வாக்குகளை பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகு தியில் போட்டியிட்ட பாமக வேட் பாளர் ஜி.கே.மணி ஓசூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 38 ஆயி ரத்து 944 வாக்குளை பெற்றார்.

அதேபோல கடந்த மக்கள வைத் தேர்தலில் கன்னியாகுமரி, தென் சென்னையில் 7 பேரவைத் தொகுதிகளில் திமுகவைவிட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. எனவே ஓசூர், வேதாரண் யம், சென்னை, கன்னியாகுமரி, கோவையை குறிவைத்து பாஜக வினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மே 2-ம் தேதி கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். எனவே, அவரது பிரச்சார பட்டியலில் கோவை இடம்பெறவில்லை. பிரதமர் மோடி தவிர பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in