கண்மாய் பராமரிப்புக்காக நிதி திரட்ட மீன்பிடி திருவிழா: சிவகங்கையில் மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்

கண்மாய் பராமரிப்புக்காக நிதி திரட்ட மீன்பிடி திருவிழா: சிவகங்கையில் மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே கண்மாய் பராமரிப்புக்காக நிதி திரட்ட ‘ஊத்தா’ முறையில் மீன்பிடி திருவிழாவை நடத்தினர்.

கிராமக் கண்மாய்களில் தண்ணீர் வற்றியதும், மீன்பிடி திருவிழா நடத்தப்படும். இதில் கிராம மக்கள் மீன்களை பிடிப்பர். அல்லது கிராம நிதிக்காக வியா பாரிகளுக்கு குத்தகைக்கு விடப்படும்.

ஆனால் கண்மாய் பராமரிப் புக்கு நிதி திரட்டவும், அதே போல், கிராம மக்கள் இல வசமாக மீன்களை பிடிக்கவும் ‘ஊத்தா’ முறையில் எஸ்.புதூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி கே.உத்தம்பட்டியில் மீன்பிடி திரு விழா நடத்தப்பட்டது.

இந்த கிராமத்தில் உள்ள காத் தான் கண்மாய் 2012-ம் ஆண்டு தானம் வயலகம் கண்மாய் அறக்கட்டளை, ஆக்சிஸ் வங்கி இணைந்து ரூ.2 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

மேலும் கண்மாய் தொடர் சீரமைப்பு பணிக்காக கண்மாய் கணக்கில் வங்கியில் ரூ.10 ஆயிரம் வைப்பு நிதி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, அப்பகுதியில் நல்ல மழை பெய்தததால், காத் தான் கண்மாய் நிரம்பியது. இதையடுத்து ரூ. 7 ஆயிரம் செலவில் 500 மீன் குஞ்சுகளை கண்மாயில் விட்டனர்.

தற்போது கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில், கிராம மக்கள் முக்கிஸ்தர்கள், வயலக திட்ட நிர்வாகி செல்வமணி ஆகியோர் இணைந்து ஊத்தா முறையில் மீன்பிடி திருவிழாவை நடத்தினர். அதன்படி, ஊத்தா என்ற வலை மூலம் மீன்பிடிக்க விரும் புவோரிடம் இருந்து தலா ரூ.200 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கிடைத்தது.

தொடர்ந்து பணம் கொடுத் தவர்கள் ஊத்தா மூலம் மீன்களை பிடித்தனர். தங்களுக்கு தேவை யான மீன்கள் கிடைத்ததும், கிராம மக்களை இலவசமாக மீன் களை பிடிக்க அனுமதித்தனர். எஸ்.புதூர், கே.உத்தம்பட்டி, செட்டி குறிச்சி, வர்ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in