

சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2016 காலண்டர் ஆண்டில் (ஜனவரி - டிசம்பர்) அஞ்சல்வழி கல்வி நிறுவனத்தின் அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அஞ்சல்வழி படிப்புகளில் சேர விரும்புவோர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவன அலுவலகத்தில் இயங்கி வரும் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம். இந்த மையம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை தொலை தூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.