ஷேல் காஸ் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பம்: பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி தகவல்

ஷேல் காஸ் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பம்: பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி தகவல்
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தா லம் பகுதியில் ஷேல் காஸ் எடுக்க அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் ஷேல் காஸ் எடுப்பதற்கான ஆரம் பக் கட்ட பணிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். ஓஎன்ஜிசி பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி, திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்ட காவிரி விவ சாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன குத்தகை விவசாயிகள் சங் கத் தலைவர் ஆர்.முருகன் ஆகி யோர் தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓஎன்ஜிசி தாக்கல் செய்த அறிக்கையில், நாகப்பட்டி னம் மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஷேல் காஸ் எடுக்க அனுமதி கேட்டு புதிதாக விண்ணப் பித்துள்ளோம். இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப் பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஷேல் காஸ் எடுக்கும் விவகாரம் தொடர் பாக தமிழக அரசு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். மனு மீதான விசார ணை மே 31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in