தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கைதை கண்டித்து தஞ்சையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கைதை கண்டித்து தஞ்சையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளரை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் பேசிய மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானியை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், “சட்டப்பேரவைத் தேர்தலின்போது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம்களின் கருத்து, பேச்சுரிமைக்கு எதிராக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in