'திமுக அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

'திமுக அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: திமுக அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசுகைய“விளை பொருட்களை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் விவசாயிகளை திமுக அரசு அழைக்கழிக்கின்றது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நெல்கள் உடனுகுடன் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் நெல்கள் உடனுகுடன் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து திமுக அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்பது தெளிவாக தெரிகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த நிவாரணம் அளிக்கவில்லை.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடனை தள்ளுபடி செய்த அதிமுக. அரசு விவாசாயிகளுக்கு தனது ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன ” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in