

சேலம் வடக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட கொலுசு உள்ளிட்ட 12 கிலோ வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் வடக்கு தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவ லர் வடிவேல் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அமானுல்லா, ரவிக்குமார் உள்ளிட்டோர் செவ்வாய்ப்பேட்டையில் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 12 கிலோ 275 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகள், வெள்ளி மெட்டிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதையடுத்து, காரில் இருந்த ஷியாம் சுந்தர் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள நகைக்கடைக்கு ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் மற்றும் மெட்டிகளை கொண்டுசெல்வதாக தெரிவித் தார். எனினும், உரிய ஆவணங் கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து, வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயபாபுவிடம் ஒப்படைத் தனர்.