கோத்தகிரி - மேட்டுப்பாளையம் இடையே காட்டுத் தீயால் 100 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்.
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்.
Updated on
1 min read

கோத்தகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் இடையே மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கர் வனப்பகுதி எரிந்து தீக்கிரையானது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும்சாலையில், கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சில இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ, தட்டப்பள்ளம் வனப்பகுதிக்குள் பரவியது.நேற்று முன்தினம் இரவு வனப்பகுதி முழுவதும் மளமளவென தீ பரவியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வேட்டைத்தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இரவு முதல் தீயைஅணைக்க போராடினர். காற்றின் வேகம் அதிகரித்ததால், தீயின் அருகேயாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வனத்தில் இருந்து மான்கள்,காட்டு மாடு, சிறுத்தை மற்றும்அறிய வகை பறவைகள் வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்தன.

காலை 7 மணிக்கு மேல் காற்றின்வேகம் குறைந்ததால், காட்டுத் தீயைகட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புபடையினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்.12 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து சேதமடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in