

விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட் டில் எம்ஆர் ஐசிஆர்சி அரசு நிதி உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஜெயசீலன் என்பவர்பாலியல் தொல்லை அளித்துள் ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினர்.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என கண்டறியப்பட்டது.இதையடுத்து ஆசிரியர் ஜெயசீலனை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் ஜோசப் உத்தரவிட்டுள்ளார்.