Published : 02 Apr 2016 10:28 AM
Last Updated : 02 Apr 2016 10:28 AM

காப்பீடு கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

காப்பீடு கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீடு கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். அத்தியவாசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும். ஏற்கெனவே மத்திய அரசானது கடந்த 5 நாட் களுக்கு முன்பு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்திய சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இந்நிலையில் காப்பீடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சாதாரண இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்றால் ரூ.700 வரை பிரீமியம் கட்ட வேண்டும். மணல் லாரி உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.9,000 வரை கூடுதல் பிரீமியம் தொகை கட்டும் நிலை ஏற்பட் டுள்ளது.

உயர்த்தப்பட்டுள்ள காப்பீடு கட்டணத்தை மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒன்று திரட்டி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காப்பீடு கட்டணம் உயர்வு குறித்து நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலை வர் வாங்கிலி கூறும்போது, ‘ஏப்.1 முதல் 3-ம் நபர் காப்பீடு பிரீமியம் கட்டணத்தை 25 சதவீதம் வரை காப்பீடு நிறு வனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் ஒரு லாரிக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் காப்பீட்டு தொகை அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து லாரிகளுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுத லாக ரூ.7 ஆயிரம் வரை செலவாகி றது. எனவே, மத்திய அரசு டீசல் மீதான வரியை குறைக்கவும், காப் பீடு பிரீமியத்தை குறைக்கவும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத் துவதை கட்டாயமாக்குவதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை (3-ம் தேதி) சென்னையில் நடைபெறும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தென்மண்டல நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x