Last Updated : 05 Apr, 2016 04:01 PM

 

Published : 05 Apr 2016 04:01 PM
Last Updated : 05 Apr 2016 04:01 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுப்பு: திருச்செந்தூரில் சரத்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடு கிறது. திருச்செந்தூர் மட்டும் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு மறுப்பு

மாவட்டத்தில் அதிமுக போட்டி யிடும் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு புதுமுகங் கள் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். சுற்றுலாத் துறை அமைச் சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைக்கவில்லை.

அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

பள்ளியில் ஆய்வக உதவியா ளர் வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக சண்முகநாத னின் உதவியாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சண்முகநாத னுக்கு சீட் கிடைக்காததற்கு இதுவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2001, 2011 தேர்தல்களில் வெற்றி பெற்ற சண்முகநாதன் 3 முறை அமைச்சராகவும், 4 முறை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை

இதேபோல் அமைச்சர் சண்முகநா தனின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் பரிந்துரை செய்த யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை.

அவரது ஆதரவாளரான விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சீட் மறுக் கப்பட்டுள்ளது. இதுபோல் கோவில்பட்டி எம்எல்ஏ செ.ராஜூக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் சண்முகநாதனின் ஆதரவாளர் இல்லை என்ற போதிலும், கட்சி தலைமைக்கு வந்த சில புகார்கள் அடிப்படையில் அவருக்கு சீட் வழங் கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

செல்லப்பாண்டியனுக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற ஒரே எம்எல்ஏ சி.த.செல்லப்பாண்டியன் மட்டுமே. தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். அமைச்சர் சண்முகநாதன் தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

4 பேர் புதுமுகங்கள்

மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கு புதுமுகங்கள் வேட்பாளர்களாக அறிவி க்கப்பட்டுள்ளனர். விளாத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் உமாமகேஸ்வரி, ீவைகுண்டத்தில் அதிமுக வழக்கறிஞர் டாக்டர் புவனேஸ் வரன், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சுந்தரராஜ், கோவில்பட்டியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ராமானுஜம் கணேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூரில் சரத்குமார்

திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளார்.

கடந்த 2011 தேர்தலில் திருநெல் வேலி மாவட்டம் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரத்குமார் இம்முறை திருச்செந் தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், பாஜக கூட்ட ணியில் இணைவதாகவும் முதலில் அறிவித்த சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கே திரும்பினார்.

கடந்த முறை சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக் கப்பட்டன. இம்முறை ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அனிதாவுக்கு சவால்

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு சவால் விடுக்கும் வகையிலேயே சரத்குமாரை அத்தொகுதியில் போட்டியிடச் செய்திருப்பதாக கூறப் படுகிறது. எனவே, திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x