பிஎம் கிசான் திட்ட 11-வது தவணைத் தொகை பெற வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பது அவசியம்

பிஎம் கிசான் திட்ட 11-வது தவணைத் தொகை பெற வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பது அவசியம்
Updated on
1 min read

தூத்துக்குடி: பிஎம் கிசான் திட்ட 11-வது தவணைத் தொகையை பெற விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 78,844 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகை வரப்பெற்றுள்ளது.

மத்திய அரசு தற்போது திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை வங்கி கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். எனவே, விவசாயிகள் 11-வது தவணைத் (01.04.2022 முதல் 31.07.2022 வரை) தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணோடு இணைப்பது அவசியம். இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் சென்று இணைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in