பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுடும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுட்ட பக்தர்கள்

வேட்டவலம் அடுத்த இசுக்கழிக்காட்டேரி பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு வடை சுட்ட பக்தர்.
வேட்டவலம் அடுத்த இசுக்கழிக்காட்டேரி பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு வடை சுட்ட பக்தர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காவடி உற்சவம் நேற்று காலை நடை பெற்றது. மேலும், கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணியில் உள்ள முருகர் கோயில், திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடியில் உள்ள முருகர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி கோயில்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மேலும், காவடி எடுத்தும், அலகு குத்தி திருத்தேரை இழுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல், வேட்டவலம் அடுத்த இசுக்கழிகாட்டேரி கிரா மத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அப்போது விரதம் இருந்த பக்தர்கள், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு ‘வடை சுட்டு’ எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மேலும், வயிற்றில் உரல் வைத்து, அதில் மஞ்சள் போட்டு உலக்கையால் இடித்து மஞ்சளை உடைத்து வேண்டுதலை நிறைவு செய்தனர். மேலும் அலகு குத்திக் கொண்டு, பொக்லைன் இயந்திரத்தில் தொங்கியபடி வேலுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு முருகப் பெரு மானை வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in