

தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கிசான் விகாஸ் பத்திரங்கள் அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையங்களில் என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேமிப்பு பத்திரங்கள் மின்னணு சேவை (இ-சேவா) மூலம் விற்பனை செய்வதற்கான புதிய திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு கிடைத்துள் ளதையடுத்து இனிமேல் இப்பத் திரங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப் படும். எனவே, அஞ்சல் நிலையங் களில் இம்மாதம் 1-ம் தேதி முதல் இச் சேமிப்பு பத்திரங்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.