

சென்னை: மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை,நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்தி வரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘அன்பாசிரியர்’ விருதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்குகிறது.
‘அன்பாசிரியர் - 2021’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது. லட்சுமி செராமிக்ஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களும் உடன் இணைந்து இதை நடத்துகின்றன.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தஅரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், விருதுக்கு தயாராகுங்கள். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 23-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை https://www.htamil.org/00217 என்ற தளத்தில் அறியலாம்.