

மூளைச்சாவு அடைந்த இளைஞர் மற்றும் வங்கி அலுவலரின் உடல் உறுப்புகள் தானத்தால் 14 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் தயாநிதி (27). சிடிஎஸ் நிறுவனத் தில் பணியாற்றி வந்தார். சாலை விபத்தில் தலையில் பலத்த காய மடைந்த தயாநிதி சென்னை மேடவாக்கம் - பெரும்பாக்கத் தில் உள்ள குளோபல் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச் சாவு அடைந்தார்.
மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக பெற் றோர் தெரிவித்தனர். இதைய டுத்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உறுப்பு களை டாக்டர்கள் எடுத்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 7 நோயா ளிகளுக்கு அவை பொருத்தப் பட்டன.
புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயகுமார் (57). கூட்டுறவு வங்கி ஊழியர். பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் மேல்சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந் தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய விரும்பு வதாக உறவினர்கள் தெரிவித்த னர்.
இதையடுத்து டாக்டர்கள் அவரது உடலில் இருந்து சிறுநீர கங்கள், கல்லீரல், இதய வால்வு கள் மற்றும் கண்களை எடுத்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 7 நோயா ளிகளுக்கு தானமாக கிடைத்த உறுப்புகள் பொருத்தப்பட்டன. மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்புகள் தானத்தால் 14 பேருக்கு மறுவாழ்வு கிடைத் துள்ளது.