எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை: பல்லடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை: பல்லடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்
Updated on
1 min read

எனக்கு எந்தப் பதவியும் தேவை இல்லை. கருணாநிதியின் மகன் என்பது மட்டும் போதும் என பல்லடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் மற்றும் உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மடத்துக்குளத்தில் நேற்று பேசியதாவது:

பல்வேறு பிரச்சினைகளுக் காக கடந்த 8 மாதங்களில் 4 முறை இந்த மாவட்டத்துக்கு வந்துள் ளேன். ஆனால், 5 ஆண்டுகளாக முதல்வராக இருப்பவர் ஒரு முறை யாவது இந்த மாவட்டத்துக்கு வந்ததுண்டா?. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள்.

திமுக ஆட்சியின்போது நெச வாளர்கள் நலனுக்காக 24 பரிந் துரைகள் செயல்படுத்தப்பட்டன. தேயிலைத் தோட்டத் தொழி லாளர்களுக்கு முதன்முதலாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப் பட்டது. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை திமுக நிறைவேற்றும். காண்டூர் கால்வாய் திட்டத்தை சீரமைக்க திமுக ஆட்சியின்போது உலக வங்கி உதவியுடன் ரூ.916 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் திரு மூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை. அமராவதி, திருமூர்த்தி அணைகளை தூர்வாரவில்லை. காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகள் முறையாக நடைபெற வில்லை. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நவீனப்படுத் தப்படாமல் கைவிடப்பட்டுள் ளது. கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலைப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டு களில் ஆளுங்கட்சியினர் யாராவது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டது உண்டா?. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உடுமலை தொகுதி வேட்பாளர் மு.க.முத்துவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பல்லடத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பேசும்போது, ‘‘எனக்கு எந்தப் பதவியும் தேவை இல்லை. கருணாநிதியின் மகன் என்பது மட்டும் போதும். பல்லடம் சுற்றுச்சாலை ஏற்படுத்தப்படும். ஜவுளிச்சந்தை ஏற்படுத்தப்படும். கறிக்கோழி ஆராய்ச்சி மையம் இவையெல்லாம் திமுக ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in