

மதுராந்தகம்: சென்னையிலிருந்து 2-ம் கட்டமாக ஆன்மிக சுற்றுப் பயணம் கிளம்பியுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர் கோயிலிலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.
மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர்கோயிலுக்குக் காலை 9 மணிக்குவந்த சசிகலா கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றார். பசுவுக்குப் பழங்கள் மற்றும் புற்களை வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர் சென்றார். அங்கு ஆதிபராசக்தி கோயிலில் சிறப்புத் தரிசனம் செய்தார். அவர் கோயிலுக்குச் செல்லும் இடங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.