

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கள்ளன் திரைப்படம் திரையிட தடை விதிக்க வேண்டுமென, தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச் சங்கத் தலைவர் வசந்த் காடவராயர் தலைமையில் அந்த அமைப்பினர் சிவகங்கை ஆட் சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது: ஏழு திருடர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப் படத்துக்கு கள்ளர் சமூகத்தினை களங்கப்படுத்தும் வகையில் கள்ளன் என்று பெயர் வைத் துள்ளனர். இந்த திரைப்படம் மூலம் சாதிய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த திரைப்படத்தை சிவகங்கை மாவட்ட திரையரங்குகளில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.