

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பலை நிலவும் நிலையில், மாற்று கட்சிகளில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகிறார் அவர்.
அதிமுகவில் செல்வாக்குடன் வலம் வந்த ஆஸ்டின், அதன் பின் தேமுதிகவில் மாநில பொறுப்பு வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது, கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் வழக்கமாக சுரேஷ்ராஜன் நிற்கும் தொகுதி கன்னியாகுமரி. இம்முறை அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் தாமரைபாரதி, மயிலாடி சாய்ராம், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி உட்பட ஏராளமானோர் மனு அளித்திரு ந்தனர். ஆனால், அண்மையில் கட்சியில் இணைந்த ஆஸ்டினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘இதனால் கட்சியில் சீட் கேட்ட பலரும் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்கின்றனர் கட்சியின் சீனியர் நிர்வாகிகள். ஆனால், ஆஸ்டின் ஏற் கெனவே அதிமுக, தேமுதிக கட்சிகளில் இருந்தவர். இதனால் அந்த கட்சிகளிலும் அவரது ஆதர வாளர்கள் உள்ளனர். அவர்கள் மறைமுகமாக ஆஸ்டினுக்கு வேலை செய்யும் வாய்ப்பு உள்ளது. பறக்கை, தெங்கம்புதூர், புத்தளம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தையும் பெரிதும் நம்பியிருக்கிறார் ஆஸ்டின்
தொலைபேசியில் அழைப்பு
அத்துடன், அதிமுக மற்றும் தேமுதிகவில் உள்ள தனது நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஆதரவு தருமாறும், வெற்றிக்கு உழைக்கு மாறும் ஆஸ்டின் பேசி வருகிறார். இவ்வாறு அதிமுக, தேமுதிகவினர் ஏராளமானோருக்கு அழைப்பு வந்துள்ளது. அக்கட்சிகளின் விசுவாசிகள் சிலர் இதுகுறித்து தங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடமும் சொல்லி புலம்பியுள்ளனர்.