

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்ட 27 பேர் கொண்ட தேர்தல்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள மணிசங்கர் அய்யர், பிரபு ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றதாக கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.