Published : 08 Apr 2016 08:31 AM
Last Updated : 08 Apr 2016 08:31 AM

அரவக்குறிச்சி ஒதுக்கப்படாததால் ஜோதிமணி அதிர்ச்சி: ‘ராகுல் காந்தி கட்டாயம் பெற்றுத் தருவார்’ என நம்பிக்கை

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர் பாளராக இருப்பவர் ஜோதிமணி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக - காங்கிரஸ் கூட்டணி உரு வானபோதே, ‘நான்தான் அரவக் குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட் பாளர்’ என்று தனக்குத் தானே அறிவித்துக்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணிகளையும் தொடங் கினார். ‘ஆர்வக்கோளாறால் ஜோதி மணி இப்படி செய்கிறார். இதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறி வுறுத்தினார். இந்நிலையில், காங்கி ரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி களில் அரவக்குறிச்சி இடம்பெற வில்லை.

இதுபற்றி ‘தி இந்து’விடம் ஜோதிமணி கூறியதாவது:

அரவக்குறிச்சி என் சொந்த தொகுதி. அந்த தொகுதி நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக் கையில் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து செய்து வருகிறேன். அரவக்குறிச்சி தொகுதி கட்டாயம் எனக்குதான் என்று ராகுல் காந்தி உறுதிபட கூறினார். ஆனால், தற்போது அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட வில்லை. இதுபற்றி காங்கிரஸ் தலைமையிடம் மீண்டும் பேசுவேன். ராகுல் காந்தி அரவக்குறிச்சி தொகுதியை பெற்றுத்தருவார்.

காங்கிரஸ் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் என் தேர்தல் பணிகள் வழக்கம்போல தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தன் மகனுக்காக சிவகங்கை தொகுதியை எதிர்பார்த்திருந்தார். ப.சிதம்பரம் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் வேளச் சேரி தொகுதியை எதிர்பார்த்திருந் தார். அந்த தொகுதிகளும் காங் கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x