தி.மலை உழவர் சந்தையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை அங்காடிக்கு விருது: சுகாதாரமான காய்கறி, பழம் விற்பனைக்கு பாராட்டு

உழவர் சந்தையில் தரமான பழம் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்து வருவதற்காக மத்திய அரசு வழங்கிய விருதை உணவு பாதுகாப்பு  துறையினர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
உழவர் சந்தையில் தரமான பழம் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்து வருவதற்காக மத்திய அரசு வழங்கிய விருதை உணவு பாதுகாப்பு துறையினர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை உழவர் சந்தை யில் தரமான பழம் மற்றும் காய் கறிகளை விற்பனை செய்த உணவு பாதுகாப்புத் துறை அங்காடிக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகத்தின் சுகாதார பழம் மற்றும் காய்கறி சந்தை எனும் திட்டம், திருவண்ணாமலை உழவர் சந்தையில் செயல்படுத்தப் படுகிறது. தி.மலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மேற்பார்வையில் அங்காடி இயங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் சுகாதாரமான காய்கறிகள் மற்றும் பழங்கள், மக்களுக்கு விற் பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழங்களின் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அரசாங்கம் நிர்ணயித்த அளவில் உரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவது உறுதி செய் யப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவண்ணா மலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு ‘கிளின் - பிரஷ் புரூட் மற்றும் வெஜிடபுள் மார்க்கெட்’ எனும் சான்றை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகம் வழங் கியுள்ளது. இந்திய அளவில் 2-வது இடத்தையும், தமிழகத்தில் முதலாவது இடத்தையும் பிடித் துள்ளது. இதைத்தொடர்ந்து திரு வண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், மத்திய அரசு வழங்கிய சான்றை காண்பித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாழ்த்துப் பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in