தீவுத்திடல் கூட்டத்துக்காக சாலை முழுவதும் வைக்கப்பட்ட அதிமுக பேனர்கள் விதிமுறை மீறலா? இல்லையா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை தீவுத்திடல் கூட்டத் துக்காக சாலை முழுவதும் வைக் கப்பட்ட அதிமுக பேனர்கள் விதிமுறை மீறலா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘சென்னை தீவுத்திடலில் கடந்த 9-ம் தேதி அதிமுக தேர்தல் பிர சாரக் கூட்டம் நடந்தது. இதற்காக தீவுத்திடல் மட்டுமின்றி, வழிநெடு கிலும் சாலையோரங்களில் மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந் தன. கடந்த மார்ச் மாதம் ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அந்த உத் தரவை மீறி இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதியே தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகைப்பட ஆதாரங் களுடன் புகார் செய்தேன். ஆனால் அவர் இது தொடர்பாக போலீஸார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பதிலுக்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் தெரிவித்தேன். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த பேனர்கள் வைக்கப்பட்டது குறித்தும், தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை அதிமுக மீறிவருவதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2 முறை புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நான் அனுப்பி யுள்ள புகார் மனுவை பரிசீலித்து, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றுதான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்றார். அதையடுத்து நீதிபதிகள், மனு தாரர் சமர்ப்பித்துள்ள புகைப் படங்களை பார்க்கும் போது, இந்த பேனர்கள் கூட்டம் நடந்த தீவுத்திடலில் மட்டுமின்றி சாலை முழுவதும் வைக்கப்பட்டுள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே இது விதிமுறை மீறல் என்றால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
