Published : 25 Apr 2016 07:47 AM
Last Updated : 25 Apr 2016 07:47 AM

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதேபோல், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி, பாஜக, பாமக வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச் சர் சி.பொன்னையன், திமுக சார் பில் முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியன், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் எஸ்.ஏழு மலை, பாஜக - காளிதாஸ், பாமக - சகாதேவன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கள் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகின்றனர். மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக, அதிமுக வேட்பாளர்களில் யார் ஒருவர் வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியின் அமைச்சராக வாய்ப்புள்ளதால், இரு கட்சி களின் வேட்பாளர்களிடையே வாக்காளர்களை கவருவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 6.30 மணிக்கு சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே தனது நடைபயண பிரச்சாரத்தை தொடங் கினார். வழியெங்கும் சால்வை மற்றும் மாலை அணிவித்து மக்கள் வரவேற்பு அளித்தனர். கருணாநிதி நகர், திடீர்நகர், கோதாமேடு, அண்ணாநகர் தெரு உட்பட 15-க் கும் மேற்பட்ட தெருக்களில் நடந்தே சென்று வாக்குசேகரித்தார்.

அடையாற்றில் தடுப்பு சுவர்

அப்போது, மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறும். திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த தொகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும், வணிக வளாகம் மேம்படுத்தப்படும். குறிப்பாக மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அடையாற்றின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சாதனை எடுத்து சொல்லி..

அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் சைதை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மொத்தம் 12 தேர்தல் பணிமனைகளை திறந்து தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ் தியேட்டர் அருகே நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி கிழக்கு ஜோன்ஸ் சாலை, 142-வது மண்ட லத்தை சேர்ந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வாக் காளர்களிடம் அதிமுக செய்துள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர், அவர் வாக்காளர் களிடம் பேசும்போது, ‘‘அம்மா உணவகங்கள், இலவச கணினி, சிறிய பஸ் சேவை உட்பட பல் வேறு அரசு திட்டங்களை மக்களுக் காக செய்துள்ள இந்த அரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண் டும்’’என்றார்.

அடிப்படை வசதிகள்

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எஸ்.ஏழுமலை அறிவிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை மேட்டுப்பாளை யம் மார்க்கெட்டில் நேற்று நடந்த கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொண் டார்.

பின்னர், மேட்டுபாளையம் மார்க்கெட் பகுதிகளில் மக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது எழுமலை கூறும்போது, ‘‘ஏற் கெனவே இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கள் இந்த தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை சரிசெய்ய வில்லை. எனவே, இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் இந்த தொகுதியை மேம்படுத்த பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்வோம்’’ என்றார்.

வெள்ள நிவாரண தொகை

பாஜக வேட்பாளர் காளிதாஸ் 3-வது முறையாக சைதை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் வண்டிக்காரன் தெரு பகுதிகளில் நேற்று வாக்குசேகரித்தார். அவர் பேசும்போது, ‘‘கன மழையின்போது மத்திய அரசு ரூ.1,940 கோடி வழங்கியுள் ளது. ஆனால், அதிமுக அரசு அதை மக்களுக்கு முழுமையாக வழங்கவில்லை. ஏற்கெனவே, இருந்த திமுக, அதிமுக எம்எல் ஏக்கள் இந்த தொகுதி மேம்பாட் டுக்கு எதுவும் செய்யவில்லை’’ என்றார்.

கால்வாய் மறுசீரமைக்கப்படும்

பாமக வேட்பாளர் தி.இரா.சகாதேவன் கோட்டூர்புரம், கன்னிகாபுரம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூறும்போது,

‘‘பாமகவின் தேர்தல் அறிக் கையை மக்களிடம் விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரிக் கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நான் வெற்றி பெறும்போது, சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள கால்வாய்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x