Published : 11 Apr 2016 07:36 AM
Last Updated : 11 Apr 2016 07:36 AM

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு: வியந்த மத்திய தேர்தல் பார்வையாளர்

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், இரு மாவட்டங்களுக்கு ஒரு தேர்தல் பார்வையாளர் (விழிப்புணர்வு) என மொத்தம் 16 விழிப்புணர்வு பார்வை யாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு பார்வையாளராக காஞ்சனா பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்த அவர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய தொகுதி களில் நடைபெற்று வரும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி, மோட்டார் சைக்கிள் பேரணி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 345 குழந்தைகள் மையங்களிலும், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்படுகிறது. ‘வரிசை யில் நின்று வாக்களிக்க சிரமப்படுவோம் என்று வாக் களிக்காமல் இருந்துவிடக் கூடாது. எளிதில் வாக்களித்து விட்டு செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’ என அவர்களிடம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கத்தில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்ற வாக் காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேர்தல் பார்வை யாளர் காஞ்சனா பிரசாத், இவர்களுக்கென்று தனியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியா? என வியப்படைந்தார்.

அதன் பின்னர், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் களுக்கு என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கான காரணங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோன்று தாய்மார்களுக்கான நிகழ்ச்சி களை அதிகம் நடத்துங்கள் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x