

அரசு ஊழியர்கள் பல்வேறு சங்கங் களாக இருந்தாலும் பொதுப் பிரச்சினைக்கு இணைந்து போராடு கின்றனர். அவர்களைப்போல் பல் வேறு சங்கங்களாக இருக்கும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் பொதுவான காரணங்களுக்கு இணைந்து போராட வேண்டும் என நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ஹரிபரந் தாமனுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. பார் அசோசியேஷன் தலைவர் சுபாஷ்பாபு தலைமை வகித்தார். இதில் ஹரிபரந்தாமன் பேசிய தாவது:
ஓய்வுபெற்ற பிறகும் என்னை நீதியரசர் என்று அழைப்பதை ஏற்கமாட்டேன். நீதியரசர் என்பது அதிகாரமிக்க சொல்லாடல். இந்த சொல்லாடல் ஒழிக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. பல சங்கங்களாக பிரிந்து கிடக்கின்றனர். அரசு ஊழியர்கள் பல சங்கங்களாக இருந்தாலும், பொதுப்பிரச்சினை என வரும்போது ஒன்றிணைந்து போராடுகின்றனர். ஆனால் வழக்கறிஞர்கள் அப்படியில்லை. 40 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 8 மாதங்களாகிறது. ஆனால் அவர்கள் மீதான விசா ரணையை இன்னும் முடிக்காமல் இருப்பது சரியல்ல.
வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது தொடர்பான விசாரணையை துரித மாக நடத்த வேண்டும். பாட்டி யாலா நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெற்ற பிரச் சினை பெரியது அல்ல. அப்படி யிருக்கும்போது பாட்டியாலா வழக்கறிஞர்களுக்கு ஒரு நீதி, தமிழக வழக்கறிஞர்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது. இதற்காக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
விடுமுறைக்கு பிறகு..
மாவட்ட நீதிமன்றங்களில் அவசியமற்ற காரணங்களுக்காக போராடுகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, மதுரை வழக்கறிஞர்களை நீதிபதிகளாக்கும் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தலாம். கோடை விடுமுறைக்கு பிறகு நீதிமன்றங்களில் நல்ல சூழல் நிலவும் என நம்புகிறேன் என்றார்