Published : 16 Mar 2022 08:30 AM
Last Updated : 16 Mar 2022 08:30 AM
சென்னை: பணிநிரவல் செய்யப்பட்ட உபரி ஆசிரியர்கள், பொது மாறுதல் கலந்தாய்விலும் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல்கலந்தாய்வு பல கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படிஅரசுப் பள்ளிகளில் உபரியாகஉள்ள பட்டதாரி ஆசிரியர்களுக் கான பணிநிரவல் கலந்தாய்வு மார்ச் 14-ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பணிநிரவலான உபரிஆசிரியர்கள் மாவட்டம் விட்டுமாவட்டம் மாறுதல் கலந்தாய்விலும் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘பணிநிரவலில் கலந்துகொண்டு இடங்களைத் தேர்வு செய்த உபரி ஆசிரியர்களை இன்று (மார்ச் 16) நடைபெற உள்ள மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் இடத்தை தேர்வு செய்யாவிட்டால், ஏற்கெனவே பணிநிரவல் செய்யப்பட்ட பள்ளியிலேயே சேரஅந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT