Published : 15 Apr 2016 10:30 AM
Last Updated : 15 Apr 2016 10:30 AM

திருப்பூர் தனியார் வங்கியில் போலீஸ் உடையணிந்து கொள்ளை முயற்சி

திருப்பூரில் தனியார் வங்கி ஊழியர்களை மயக்கமடையச் செய்து, போலீஸ் உடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக, நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை மும் மூர்த்தி நகர் சமித் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விஜயகோபால் (49). இவர், நேற்று முன்தினம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு, காவல் உதவி ஆய்வாளர் உடையணிந்து சென்றுள் ளார்.

நான்கரை கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும், அதை எப்படி செலுத்துவது எனவும் அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்துள்ளார். மேலும், தனக்கு பிறந்தநாள் என்று கூறி, கேக் வெட்டி வங்கி ஊழியர்கள் 6 பேருக்கும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் அவர் கள் மயக்கமடைந்தனர். அப்போது வங்கிக் குள் வாடிக்கையாளர்கள் சிலர் வரவே, அங்கி ருந்து அவசரமாக புறப்பட்டார். இதுதொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த தகவலின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

இந்நிலையில், வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மூலமாக, விஜய கோபாலை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகர ஆணையர் எம்.என்.மஞ்சுநாதா ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘வங்கியில் பணம் எதுவும் திருட்டு போகவில்லை. பனியன் நிறுவனம் நடத்தியதில் விஜயகோபாலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாநல்லூர் சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அவரை கைது செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x