Last Updated : 13 Apr, 2016 08:56 AM

 

Published : 13 Apr 2016 08:56 AM
Last Updated : 13 Apr 2016 08:56 AM

திமுக பட்டியலுக்காக காத்திருக்கும் ஜெயலலிதா: அதிமுக வேட்பாளர்கள் மீண்டும் மாற்றம்?

திமுக முன்னாள் அமைச்சர்கள் நிறுத்தப்படும் தொகுதிகளில், அவர்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் தற்போதைய அமைச்சர்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. எந்த நேரத்திலும் மாற்றம் இருக்கலாம் என்பதால் அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளி யானது. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு புகார்கள் காரணமாக 6 முறை வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. 3 பேர் தொகுதி மாற்றப்பட்டனர்.

கடந்த முறை நத்தம் தொகுதி யில் போட்டியிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, இப்போது ஆத்தூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிறுத்தப் படுவது உறுதியாகிவிட்டது. ஐ.பெரியசாமிக்கு வாய்ப்புள்ள தொகுதியில், வெற்றி பெற வேண் டிய கட்டாயம் தற்போது நத்தம் விஸ்வநாதனுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, கரூர் தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். இதேபோல, சென்னை தி.நகரில் பாஜக சார்பில் எச்.ராஜா நிறுத்தப்பட்டதால், அங்கு அறிவிக்கப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் மாற்றப்பட்டு, தி.நகர் சத்தியா நிறுத்தப்பட்டுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நிறுத்தப்படுவது உறுதியானதால், திருச்சி கிழக்கில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு கொறடா ஆர்.மனோகரன், மேற்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். இதுபோல மேலும் சில தொகுதிகளில் திமுகவுக்கு சரியான போட்டி அளிக்கும் வகையில் அதிமுக வேட் பாளர்கள் நிறுத்தப்பட்டு வரு கின்றனர். குறிப்பாக, திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து அமைச்சர் ஆர்.காமராஜ் நிறுத்தப்படலாம். அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூர் தொகுதிக்கு மாற்றப் படலாம். பட்டியலில் மாற்றம் இருக் கலாம் என்பதால், அதிமுக வேட்பா ளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 6 அமைச்சர்கள், முன்னாள் அமைச் சர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே நாளில்..

இந்நிலையில், தலைமை அறிவிக்கும் தினத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 பேரும் வேட்பு மனுக்களை தாக் கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தற்போது வேட் பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “முதல்வர் ஜெயலலிதா பிரச் சாரத்தின் இடையில் தேர்தல் அறிக் கையை வெளியிடுவார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின் றன. தற்போது வேட்பாளர்கள் அனை வரும் வேட்பு மனுதாக்கல் தொடர்பான அறிவிப்புக்கு காத்தி ருக்கின்றனர். தேதியை அறிவித்த தும் அந்த நாளில் அனைத்து வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்வர். பல வேட்பாளர்கள் புதுமுகங் களாக இருப்பதால் ஆலோசனை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x