Published : 16 Mar 2022 08:17 AM
Last Updated : 16 Mar 2022 08:17 AM
சென்னை: ‘டெட்’ தேர்வு அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு செல்போன் மூலமாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் விளக்கம் பெறலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் - செயலர் எம்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கை கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 14-ம் தேதி தொடங்கியது.
தகுதித்தேர்வு அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 94446-30028, 94446-30068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். எழுத்துமூலம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினால் trbtetgrievance2022@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுத, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். டெட் தேர்வு ஆன்லைனிலா அல்லது நேரடியாகவா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT