

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது.
இதனை ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத் தலைவர் புல்லாணி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
வடமாடு மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். ஒரு காளைக்கு தலா 20 நிமிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கம், அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு களும், அதேபோல பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக் கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வடமாடு மஞ்சு விரட்டைக் கண்டுகளித்தனர்.