Published : 14 Apr 2016 03:53 PM
Last Updated : 14 Apr 2016 03:53 PM

சேலம் திமுக வேட்பாளர்கள் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 3 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசல் தடுக்கும்வகையில் பட்டியல் தயார் செய்யப் பட்டிருப்பதாக திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட திமுக-வை பொருத்தவரை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் வீரபாண்டி ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூவரும் தனிதனி கோஷ்டியாக இயங்கி வந்தனர். சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு, மேற்கு ஆகிய 3 மாவட்டங்களாக பிரித்து, மூவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை திமுக தலைமை அளித்தது. வீரபாண்டி ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் பல நேரங்களில் நேரடி மோதலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்தது.

இவ்வாறு கோஷ்டி பூசல் மத்தியில் சேலம் மாவட்ட திமுக-வில் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு கடினமானதாக இருக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைமை வேட்பாளர்கள் தேர்வில் அதீத அக்கறை செலுத்தியது. வேட்பாளர் தேர்வில் மாவட்ட செயலாளர்கள் பட்டியலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அக்கறை செலுத்தி இருப்பது வேட்பாளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆளுங்கைக்குட்பட்ட மேற்கு தொகுதி வீரபாண்டி ராஜேந்திரன் ஆதரவாளரான பன்னீர்செல்வத்துக் கும், கிழக்கு மாவட்டத்தில் ராஜேந்திரன் ஆதரவாளரான அம்மாசியும் வேட்பா ளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இடைப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய இடங்களில் வீரபாண்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதால், அவரின் கை ஓங்கியுள்ளதாக திமுக தொண்டர் களிடையே கருத்து எழும்பியுள்ளது. இருப்பினும், கோஷ்டி பூசலை தவிர்த்து, வேட்பாளர் களுக்கான முக்கியத்துவத்தை திமுக தலைமை கையாண்டு இருப்பது வாக்குகள் சிதற வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x