

ஓசூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார் களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை-பாக்கு, பழம், பூ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தேங்காய் சாதம் மற்றும் தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட திட்ட அலுவலர் சரளா, புள்ளியல் அலுவலர் சீனிவாசன், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், மோசின்தாஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.