Published : 15 Mar 2022 04:00 AM
Last Updated : 15 Mar 2022 04:00 AM

மதுரையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தை செல்லூர் கே.ராஜூ சந்தித்தது ஏன்?

மதுரை

மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மதுரை மாநகராட்சியில் அதி முக 100 வார்டுகளில் தனித் துப் போட்டியிட்டு 15-ல் மட்டும் வெற்றிபெற்றது. வேட்பாளர் தேர்வில் செல்லூர் கே.ராஜூ கோட்டை விட்டதாலேயே அதிமுக படுதோல்வியடைந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.

வெற்றிவாய்ப்புள்ள பலருக்கு செல்லூர் கே.ராஜூ ‘சீட்’ தரவில்லை என்றும், அவர்களுக்கு ‘சீட்’ வழங்கியிருந்தால் அதிமுக 40 வார்டுகள் வரை கைப்பற்றி யிருக்கும் என்றும் கட்சியினர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். ‘சீட்’ கிடைக்காத முன்னாள் கவுன் சிலர்கள் பலர் கட்சி மாறினர். இது செல்லூர் கே.ராஜூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதைப் பயன்படுத்தி தற்போது மதுரை மாநகர அதிமுகவில் முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.

அதனால், செல்லூர் கே.ராஜூ தனது இருப்பைத் தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதனாலே, அவர் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாநகர அதிமு கவினர் கூறியதாவது:

ஜெயலலிதா இருந்தவரை அவரது செல்லப்பிள்ளையாக அதிமுகவில் செல்லூர் கே.ராஜூ வலம் வந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் பலர் நீக்கப்பட்டபோதும் பதவிகள் பறிக்கப்பட்டபோதும் துறைகள் மாற்றப்பட்டபோதும் செல்லூர் ராஜூ மட்டுமே ஒரே துறை அமைச் சராக இருந்து வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் எப் போதுமே தங்களை முன்னாள் முதல்வர் கே.பழனிசாமியின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆனால், செல்லூர் கே.ராஜூ தன்னை யாருடைய ஆதரவாளராகவும் காட்டிக் கொள் ளவில்லை.

மேலும், சசிகலாவை அமைச் சர்கள், நிர்வாகிகள் பலர் விமர் சனம் செய்தபோதிலும் செல்லூர் கே.ராஜூ மட்டும் `சின்னம்மா' என்றே அழைத்து வந்தார்.

தேனி மாவட்ட அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சசிகலாவை கட்சியில் மீண் டும் சேர்க்கத் தீர்மானம் நிறை வேற்றியபோது செல்லூர் கே.ராஜூ மதுரையில் தீர்மானம் நிறைவேற்றுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அதற் குள் சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜாவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் சசிகலாவை கட்சியில் சேர்க்கும் விவகாரம் தற்போது அடங்கிப்போனது.

இந்தச் சூழலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுடன் இதுவரை எந்த வெளியூர் மாவட்டச் செய லாளர்களும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்காதநிலையில் செல்லூர் கே.ராஜூ மட்டும் சந்தித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு செல்லூர் கே.ராஜூ, தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருப்பதையும், அவரது ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டதையே காட்டுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x