

அஇமூமுக நிறுவன தலைவர் மருத் துவர் என்.சேதுராமனின் அரசியல் செயல்பாடுகளுக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மகன் மருத்துவர் எஸ்.குருசங்கர் அறிவித்துள்ளார்.
அகில இந்திய மூவேந்தர் முன்ன ணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.ந.சேதுராமன், சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளி யேறினார். பார்வர்டு பிளாக் மற்றும் நடி கர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி உட்பட சில கட்சிகளுடன் இவரது கட்சி யும் இணைந்து இந்தத் தேர்தலில் தனி அணியாக போட்டியிடுகிறது.
இதையடுத்து அதிமுக, திமுக போன்ற கட்சிகளைக் குறித்து, தனது பல்வேறு கருத்துகளை சேதுராமன் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் எஸ்.குருசங்கர் நேற்று ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறிய தாவது: எனது தந்தை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையை நிறுவி கடின உழைப்பால் மிகப்பெரிய நிறுவன மாக மாற்றியுள்ளார். அவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகளில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. மருத்துவம் ஒரு தொழில் அல்ல; அது சேவை சார்ந்தது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் டிரஸ்டி, தலைவர் பதவியில் இருந்து சட்டப்படி எனது தந்தை கடந்த 2.1.2012-ல் விலகி விட்டார். தற்போது மருத்துவமனை தலைவராக நான் உள்ளேன். 27 ஆண்டு களாக இந்த மருத்துவமனை தரமான மருத்துவ சேவையை வழங்கி வரு கிறது. சேதுராமனின் அரசியல் நடவடிக்கையை மனதில் கொண்டு, எங்கள் மருத்துவமனையை பலரும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க் கக்கூடும். அனைத்து கட்சியினரும் இம் மருத்துவமனைக்கு வருகின்ற னர். அனைத்து கட்சி, ஜாதியைச் சேர்ந்த வர்களும் இங்கு பணியாற்றுகின்றனர். சேதுராமனின் அரசியல் நடவடிக்கை களுக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அவர் அரசியல்ரீதியாக எடுக்கும் எந்த முடிவும் இந்த மருத்துவமனையைக் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செயல்பாடுகள் நாளுக்கு நாள் மாறி வருவது எங்களால் ஏற்கக்கூடியதாக இல்லை. அரசிய லுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களுக்கு இம்மருத்துவமனை தொடர்ந்து சேவை புரிய காத்திருக்கிறது என்றார்.