

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளயில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், நூலகம் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 1969-70-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நூலகத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
வெள்ளை அடித்து, தேவையான மேசை, நாற்காலிகள் ரூ.65 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட நூலகம், மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்கள், பள்ளி நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ச்சியடைந்தனர்.
பேரூராட்சி மன்றத் தலைவர் யுவராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.