ஆராய்ச்சி மாணவர்களின் 1,071 ஆய்வு திட்டங்களுக்கு நிதியுதவி

ஆராய்ச்சி மாணவர்களின் 1,071 ஆய்வு திட்டங்களுக்கு நிதியுதவி
Updated on
1 min read

சென்னை: ஆராய்ச்சி மாணவர்களின் 1,071 ஆய்வு திட்டங்களுக்கு ரூ.80.32லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பாக கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் விதமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவிஅளிக்கப்படுகிறது. மாணவர்களின் ஆராய்ச்சி தொடர்பாக விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதேபோல சிறந்த திட்டங்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 11,546 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.

இவை மன்றத்தின் துறை வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட 1,071 திட்டங்களுக்கு நிதியாக ரூ.80 லட்சத்து 32,500 வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர் ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது முதல்தற்போது வரை மொத்தம் 7,439 திட்டங்களுக்கு ரூ.5 கோடியே 57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in