Published : 14 Mar 2022 08:07 AM
Last Updated : 14 Mar 2022 08:07 AM

உபரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறை வெளியீடு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகளை தற்போதுபள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்;

நடப்பு கல்வியாண்டில் (2021-22) ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 150 மாணவர் எண்ணிக்கை இருப்பின் 5 ஆசிரியர் பணியிடங்களும், அதே பள்ளியில் ஆங்கிலவழிப் பிரிவில் 15 மாணவர்களுக்கு மேல் இருப்பின் ஓர் ஆசிரியர் பணியிடமும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட வேண்டும். இதுசார்ந்த பணிகளை துரிதமாக முடித்து அதன் பட்டியல் விவரங்களை இயக்குநரகத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x