Published : 14 Mar 2022 05:09 AM
Last Updated : 14 Mar 2022 05:09 AM
குப்பைக்கு செல்லக்கூடிய காகிதங்களை கொண்டு, அழகிய சிற்பங்களை உருவாக்கி வருவதோடு, இக்கலையை பள்ளி மாண வர்களுக்கும் கற்றுத் தருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணன்.
திலாசுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர், இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பயன்படுத்திய காகிதங்களை குப்பையில் வீசாமல் அவற்றை கொண்டு சிற்பங்களை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற் படுத்தி, பல்வேறு சிற்பங்களை செய்து வருகிறார்.
இது குறித்து ஆசிரியர் கிருஷ் ணன் கூறுகையில், ‘‘பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓவியங்கள் வரைய சொல்லிக் கொடுப்பதுண்டு. அதனை சற்று மாற்றி குச்சி ஒன்றில், வீணாக தூக்கி வீசப்படும் காகிதங்களை சுற்றி சிற்பம் உரு வாக்க முயற்சித்தோம். அதன் தொடர்ச்சிதான் இந்த காகித சிற்பங்கள். முதலில் தனிநபரை மையப்படுத்திய உருவாக்கப்பட்ட சிற்பங் கள் நாளடைவில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மாறியது.
கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, காவடி, மயிலாட்டம் போன்ற கலைகளின் சிற்பங்கள், உரியடித்தல், இள வட்டக்கல் தூக்குதல் போன்ற சிற்பங்களாக வளர்ந்திருக்கின்றன.
ஒரு பள்ளியில் எப்படி இயற்பியல், வேதியியல் உள்ளிட்டவை களுக்கு ஆய்வகம் இருக்குமோ,அதுபோன்று இந்த சிற்பங்க ளுக்காக தனி அறையை, ஆய்வகம் போல் அமைத்துள்ளோம். இங்கு மாணவர்கள் உருவாக்கிய இக்காகித சிற்பங்களை வைத்துள்ளோம். ஆர்வமுள்ள மாணவர்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வருகின்றனர்” என்றார்.
கடந்த 15 ஆண்டுகளாக இக்கலைப் பணியில் ஈடுபட்டு வரும்ஆசிரியர் கிருஷ்ணன், புதுச்சேரி யில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி, தமிழகம், கேரளா என அண்டை மாநிலங்கள் என 40-க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்களுக்குச் சென்று மாணவர்களுக்கு இப்பயிற்சியை அளித்து வருவதாக தெரிவிக்கிறார்.
“பொதுநல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், திருநங்கைகள், வெளிநாட்டவர் போன்ற வர்களுக்கும் பயிற்சி அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
என்னுடைய இந்த காகித சிற்பங்கள் புதுச்சேரி ஆளுநர் மளிகையில் இடம் பெற்றுள்ளது. பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கின்றன’’ என்றார்.
காகிதங்களை குப்பையில் வீசாமல் அவற்றை கொண்டு சிற்பங்களை உருவாக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT