Published : 14 Mar 2022 05:06 AM
Last Updated : 14 Mar 2022 05:06 AM

பங்குனி பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல நாளை முதல் 18-ம் தேதி வரை அனுமதி

பங்குனி மாத பவுர்ணமி வழி பாட்டை முன்னிட்டு நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோயில்களில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை பிரதோஷம், 17-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு மார்ச் 15 முதல் 18-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

காய்ச்சல், இருமல் உள்ளவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் மலைக்குச் செல்ல அனுமதி யில்லை. இந்த 4 நாட்களும் மலையடிவாரத்தில் காலை 7 முதல் 10 மணி வரை வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x