Published : 27 Apr 2016 09:17 AM
Last Updated : 27 Apr 2016 09:17 AM

கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படும் தேர்தல் ஆணையம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம்போல் செயல்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமா வளவன், ஆயங்குடி பகுதி யில் நேற்று, கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத் தரவை மக்கள் நலக் கூட்டணி வரவேற்கிறது. ஜெயலலிதா பங்கேற்கும் தேர்தல் பொதுக் கூட்டம் மாலையில் நடைபெறும் நிலையில், காலை முதலே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்து பட்டியில் அடைப்பதுபோல் அடைத்து வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனால் வெயிலின் கொடுமை தாங்காமல் 5-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயினர். இது பெரும் மனித உரிமை மீறல்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையம் சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத் தக்கது. இறந்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப் பட்ட அரசியல் கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

அதேநேரம் தேர்தல் ஆணை யம் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. வாக்குச் சாவடி அமைத்தல், தேர்தல் அலுவலர் நியமித்தல் போன்ற பணிகளை செய்யும் ஏஜண்ட்கள் போல் செயல்படுகிறது.

ஆளும் கட்சி ஆயிரக்கணக் கான கோடி கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில அதிகாரிகளை மாற்றினால் மற்ற அதிகாரிகள் பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம், சில ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x