

தேர்தலையொட்டி முதல்வர் ஜெய லலிதாவை அவரது இல்லத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பு களைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெ.ஜான் பாண்டியன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.எம்.ஜெகன் மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான ஏ.எஸ்.பாத்திமா முசப்பர், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் மற்றும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரும், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றத்தின் நிறுவனத் தலைவருமான பேராயர் டாக்டர் மா.பிரகாஷ் தலைமையில், பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஜெய லலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரி வித்தனர்.
மேலும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமி முன் அன்சாரி, உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் கே.செல்ல முத்து உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன் னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், உழவர் உழைப்பாளர் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கும்படி முதல் வரிடம் கேட்டுள்ளதாக அவற்றின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதிமுகவில் ஆர்.சுந்தர்ராஜன்
‘பயணங்கள் முடிவதில்லை’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘குங்குமச் சிமிழ்’, ‘ராஜாதி ராஜா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரையில் மதிமுகவின் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். அதன்பின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திரைப்படத்துறையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று போயஸ் கார்டன் சென்ற சுந்தர்ராஜன், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண் டுள்ளார்.