Published : 13 Mar 2022 04:20 AM
Last Updated : 13 Mar 2022 04:20 AM

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து வகையான பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:

அனைத்து வகையான பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதம் 15 சதவீதம் (பெர்சன்டைல்) குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 35, பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 30, ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25 என மதிப்பெண் விகிதம் இருக்கும். குறைக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் விகித அடிப்படையில் புதிய தேர்வு முடிவை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x