Last Updated : 12 Mar, 2022 03:40 PM

 

Published : 12 Mar 2022 03:40 PM
Last Updated : 12 Mar 2022 03:40 PM

தமிழக ஆளுநர் தஞ்சை வருகை: முறையான இட ஒதுக்கீடு கோரி முன்னாள் படைவீரர்கள் மனு

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு வருகை தந்த தமிழக ஆளுநரை வரவேற்ற மராத்திய மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும் நூலகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான சிவாஜி ராஜா பான்ஸ்லே.

தஞ்சாவூர்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தார்.

தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஆளுரை முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கத்தினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, அரசுத் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பின்பற்றப்படுவதில்லை.

முன்னாள் படைவீரர்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 1 முதல் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 3 ஆண்டுகளாக கிடைக்காமல் உள்ள கல்வி உதவித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை. இக்கூட்டம் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னாள் படைவீரர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

இதையடுத்து, மாலை சரசுவதி மகால் நூலகம் மற்றும் பெரியகோயிலுக்கு ஆளுநர் செல்லவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x